19 டிசம்பர் 2023

உயிர் சீர்

 

  • எழுத்தாளர் சிவசங்கரி -ராணி வார இதழ் இணைந்து நடத்திய சிறுகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற சிறுகதை 
  •                          caph; rPh;..!

            --------

    ePq;f vd;d nrhd;dhYQ; nrup.eh ,g;g fy;ahzk; gz;zpf;f khl;Nld;..kfs; tsh;kjpapd; jPu;khdkhd gjpypy;>mre;J Nghdhh; rpjk;guk;.

     

    ,j;jidf;Fk; khg;gps;isahf tug;Nghfpw tPuKj;J>Ng&h; tl;lhuj;jpy; ngupa re;ijahd G+Ytgl;b re;ijapy; thioapiyf; fl;Lfis tpw;Fk; rpwpa fil itj;Js;shd;.tPl;by; xNu gps;is.mk;kh kl;Lk;jhd;.NtW ve;j gpf;fy; gpLq;fYk; ,y;yhj>XusT trjpahd

    ,lk;jhd;.ngz; ghh;f;fntd;W te;jNghNj ngz;iz vdf;F nuhk;g Gbr;rpUf;F khkh..tsUfpl;NlAk; rk;kjkh..D Nfl;L nrhy;Yq;f..vd;wtd;>fy;ahz Vw;ghnly;yhk; jlGlyh xz;Zk; Ntz;lhk;.vd;;d KbANkh mijr; nra;q;f NghJk;vd;W$l nrhy;yp tpl;lhd;.mtdJ jhAk;>$l te;j cwtpdh;fSk; mjidNa MNkhjpj;J tpl;Lr; nrd;wdh;. rpjk;guj;jpd; kidtp Nfhkjpf;Fk; ,e;j rk;ge;jj;jpy; kpFe;j kfpo;r;rp.

     

    ,t;tsT Njhjhd ,lk; ,d;ndhd;W mikath NghfpwJ.,e;jg; ngz; Vd; mij Gupe;J nfhs;s khl;Nld; vd;fpwhs;.? vd;W  tsh;kjp kPJ kpFe;j NfhgKk; te;jJ rpjk;guj;jpw;F.

     

    xU Ntis fhjy; fPjy; vd;W VjhtJ..mt;thW Nahrpj;j rpjk;guj;jpw;F mjw;fhd rhj;jpaNk

    ,y;iy vd;Wk; Gupe;jJ.

     

    gj;jhtJ tiu kl;LNk gbf;fr; nrd;W te;jtis fy;Yhupapy; Nrh;f;f trjpapy;iy vd;W gbg;ig epWj;jptpl;lth;jhd;. kw;wgb ,e;j ehd;F tUlq;fspy; NfhtpYf;Fk;>jhq;fs; mioj;Jg; NghFk; ,lq;fSf;Fk; jtpu mts; ntspNa jdpNa vq;Fk; nry;tjpy;iy.

     

    jd;Dld; Njhl;lj;jpw;F tUths; ML khLfs; cs;s gl;bia $l;bg; ngUf;fp Rj;jk; nra;ths;. mitfNshL nfhQ;rNeuk; nfhQ;rpf; nfhz;b Ug;ghs;.mth;fSf;F ,Uf;Fk; xNu nrhj;jhd miu Vf;fh; epyj;jpy; itf;fg;gl;bUe;j jf;fhspr; nrbfSf;F jz;zPu; tpLths;. gpd;dh; mq;fpUe;j Ie;J khkuq;fisr; Rw;wp tUtJk;>khq;fha;> khk;gok; vd;W gwpj;J jpd;gJk;>mjd; epoypy; mku;e;J rpy Neuk; Gj;jfq;fs; gbg;gijAk; jtpu NtW tpj;jpahrkhd eltbf;iffs; vijANk fz;ljpy;iy.gpd; Vd; ,ts; gpbthjk; gpbf;fpwhs;?

     

    tptrhak; nra;fpNwd; vd;W epiwaf; fld;fs; cs;s>mg;gdplk; NghJkhd msT gzq;fhR trjpapy;iy.,g;NghJ vjw;F fy;ahzk; vdW Nahrpf;fpwhNsh.?

     

    jlGly; ,y;yhj fy;ahz vw;ghL vd;whYk; Fiwe;jJ Ik;gjhapuk; Ntz;Lk;.jhyp>khiy> Goq;Ftjw;F nfhQ;rk; ghj;jpu gz;lq;fs;>Gjpa gha; jiyaiz>nghz;Z khg;gps;isf;F nfhQ;rk; Jzpkzp..,Jf;F Ik;gjhapuk; jhuhsk;..me;jg; gzj;jpw;Fk; Njhl;lj;jpYs;;s khkuq;fisAk;>%Z N[hb MLfisAk;>nuz;L fwitfisAk; tpiy Ngr>ahthupaplk; nrhy;ypAkhapw;W. mg;Gwnkd;d.. fy;ahzj;Jf;F rk;kjpf;f

    ,tSf;F frf;FJ.? rpjk;guj;jpd; kdk; Nfs;tpfSf;F gjpy; njupahky; tpopf;fyhapw;W. vd;dth ,Uf;Fk;.?miygha;fpw kdJld;

    ,g;NghJk; tsh;kjpiag; ghh;j;Jf; nfhz;bUe;jhh; rpjk;guk;.

     

    jfg;gidg; nghUl;gLj;jhj tsh;kjp jd; ghl;Lf;F gl;biar; Rj;jk; nra;J nfhz;L ,Ue;jhs;. rhzpia topj;J cuf;Fopapy; nfhz;L Ngha; Nghl;L tpl;L>MLfSf;F Gy;Yk;>jiofisAk; fl;bj; njhq;ftpl;Ltpl;L>khLfisf; Fspg;ghl;lj; Jtq;fptpl;lhs;.mts; nra;Ak; Ntiyfs; vy;yhtw;wpYk; xU xOq;Fk;>Rj;jKk; ,Uf;Fk;.

    me;j tpraj;jpy; kfis epidj;J vg;NghJk; mtUf;Fg; ngUikahfj;jhd; ,Ue;jJ.

     

    ,Lg;gpypUe;j ntw;wpiyr; rPtiy vLj;J thapy; mjf;fpagbNa tsh;kjpia Nehl;lkpl;ltUf;F xUNtis cly; uPjpaha; mtSf;F vJTk; gpur;rpid>NfhshW ,Uf;FNkh..? khiyapy;> kidtpaplk; nrhy;yp tprhupf;fr; nrhy;y Ntz;Lk; vd vz;zkpl;ltUf;F>fhiyapy; Fbj;j fk;gq;$o; Nyrhf mah;itj; ju>gl;br; rhiyapy; Nghl;Litj;jpUe;j ehh;f;fl;bypy; rupe;jth; mg;gbNa fz;%bdhh;.

     

    ,uT gLf;ifaiwf;F te;J>jiuapy; ghia tpupj;Jf; nfhz;bUe;j Nfhkjpaplk;>mjw;fhfNt fhj;jpUe;j rpjk;guk;>ek;k tsUf;F clk;GNy VJk; gpur;rpidah.?Vd; fypahzk; Ntz;lhk;..D Gbthjk; Gbf;fpwh.?cq;fpl;l VJk; nrhy;ypap Uf;fhsh.?

     

    mj nkhjy;ypNa Nfl;Ll;lDq;f..mg;gbnay;yhk; xU gpur;rpidAkpy;Ny.vy;yhk; xOq;fh Njjp jtwhk elf;FJ.Ntw mtSf;F kdRNy VJk; gakpUf;FNjh..D epidr;R mg;gbnay;yhk; gag;gl xd;Dkpy;Ny.,J rhjhuzkhd tprak;jhd;Dk; njfpupaq;$l nrhy;ypapUf;fDq;f.mg;bAk; me;jf; fOij nuhk;g gpbthjkh vdf;F ,g;g fypahzk; Ntz;lhk;.,d;Dk; ehyQ;R tUrk; Nghfl;Lk;Nd nrhy;YJ.,Jf;F NkNy mtfpl;Nl vd;d nrhy;wJD vdf;Fk; ntsq;fyPq;f.rpd;dg; Gs;isah..>nuz;Lmb Nghl;L nkul;bntf;f.?

    ehshd;idf;F Gjq;fpoik khg;gps;is T+l;Lf;fhuq;f epr;rak; gz;zpf;f thNuhk;..D Ntw nrhy;yPUf;fhq;f..,t mJf;Fs;s kdir khj;jpfpl;lh guthy;iyNa..Djhd; ,Uf;F vdf;F..k;..ek;kl jiyapNy vd;d vOjp ntr;RUf;Nfh..MUf;F njupAk;..?Nfhkjpapd; ngU%r;rpy; ntf;ifAk; JauKk; ntspg;gl;lJ.

     

    VjhtJ nrhd;dhj;jhNd ,d;d gpur;rpidia

    ,g;bj; jPu;j;Jf;fyhk;D nrhy;y KbAk;.xU voitAk; nrhy;yhl;b kDrd; vd;d gz;z KbAk;.?NfhgKk;>kpFe;j kdr; Nrhh;Tk; rpjk;guj;ij Ml;bitf;f mg;gbNa cwq;fpg; Nghdhh; rpjk;guk;.

     

    Gjd;fpoik fhiy ey;yNeuj;jpy; epr;rajhk;G+yk; ey;ygbahf Kbe;jJ.if eidf;Fk;tpUe;jpd; NghJk; tsh;kjpapd; Kfk; ck;nkd;W ,Ue;jij ftdpf;f jtwtpy;iy tPuKj;J.mtd; kdJf;Fs; VNjh neUbaJ.mtSf;F ,e;jf;fy;ahzj;jpy;

    ,\;lkpy;iyNah..khkhtplk; mtsJ tpUg;gj;ij Nfl;fr; nrhy;ypapUe;NjNd..mtnuhd;Wk; tpj;jpahrkhfr; nrhy;ytpy;iyNa.>mtsplNk Neubahf Nfl;Ltplyhkh.? mjhd; rhp..’ vz;zkpl;ltd; jf;f rkak; ghh;;j;jpUe;jhd;.

     

    nghJthd tpraq;fs; Fwpj;J cwtpdh;fs; Rthu];akhfg; Ngrpf;nfhz;bUe;jdh;.,Jjhd; rupahd Neuk;.tPuKj;J rpjk;guj;jplk; nrd;W> “tsh;kjpfpl;Nl nuz;L thh;j;ij NgNrhDk; khkh..

     

    rpjk;guk; jpLf;fpl;lhh;.jdpahg; NgrTl;lh ,t ghl;Lf;F fy;ahzj;jpNy vdf;F ,\;lkpy;Ny..D cswpf; nfhl;Ldh vd;d gz;wJ.? mt nttukpy;yhk nrhy;wij ek;gp khg;gps;isAk; Kbit khj;jpfpl;lh ey;y rk;ge;jk; ifia Tl;Lg; NghapUNk..

    mg;b nghz;Zfpl;Nl NgrwJ ek;ks;Ns tof;fkpy;yPq;fNs..mtUila Fuy; kpfg; gytPdkhf ntspg;gl;lJ mtUf;Nf njupe;jJ. NkYk; khg;gps;is jtwhf vJTk; vz;zptplf; $lhNj vd;w gaKk; ,Ue;jJ.

     

    Mdhy;>tPuKj;J mg;gbnay;yhk; vijAk; fUj;jpy; nfhs;stpy;iy..mnjy;yhQ; nrupjhd; khkh..fhyk;G+uh $l thog;Nghw nghk;gis..xU thh;j;ij Nfl;Lfpl;lh..mtSf;Fk; VjhtJ nrhy;yNtz;baJ ,Ue;jh nrhy;yl;LNk khkh.. mjdhNy jg;G xz;Zk; te;jpuhJ.Nfl;fhk Tl;ljhNyNa epiwa gpur;rpid fy;ahzj;Jf;F mg;Gwk; th;wij jtph;j;Jf;fyhNk.tsUfpl;Nl nrhy;yp nuz;L epkprk; nghlf;fhspg; gf;fk; tur; nrhy;Yq;f khkh.vd;wgbNa tPuKj;J tPl;bd; gpd;gf;fk; cs;s rg;Nghl;lhg; go kuj;jpd; epoiy Nehf;fp elf;fj; Jtq;fptpl;lhd;.

     

    FLFLntd;W rikayiwf;Fs;Ns Xba rpjk;guk; Nfhkjpaplk; tpraj;ijr; nrhy;y>mtSf;Fk; gjl;lk; njhw;wpf; nfhz;lJ.mtSk; ,g;gbnahU R+oy; tUnkd;W vjph;ghh;f;ftpy;iyNa..

     

    rup MfwJ Mfl;Lk;q;f>ek;k khdk; ek;k Gs;Ns ifNy..d;D mtSf;Fk; njupahkah ,Uf;Fk;. ey;ygbah cd;w Kbit nrhy;ypg;NghL..d;D xU thh;j;ij ek;k flikf;F nrhy;ypUNthk;.mg;Gwk; ek;k tpjpg;gb elf;fl;Lk; thq;f..Nfhkjpapd; mghu Jzpr;riyf; fz;L me;j Neuj;jpYk; tpag;gha; ,Ue;jJ rpjk;guj;jpw;F.

     

    Mo;e;j NahridAld; Njhl;lj;J [d;dy; topahfg; ghh;j;Jf; nfhz;bUe;j tsh;kjpaplk; tPuKj;Jtpd; tpUg;gj;ijr; nrhy;yTk; mth;fSf;F rw;W gakhfj;jhd; ,Ue;jJ.,ts; ghl;Lf;F R+oy; njupahky; fj;JthNsh.?jdJ vz;zj;ij tpl;;Lf; nfhLf;fhky; gpbthjk; gpbg;ghNsh.?

     

    tsU..kdij jplg;gLj;jpf; nfhz;L Nfhkjpjhd; mioj;jhs;.ntLf; nfd;W jpUk;gpa tsh;kjpapd; Kfk; fLfLntd;Wjhd; ,Ue;jJ. vd;d.?

    ghh;itapNy mts; Nfl;l Nfs;tpapy; Nfhgk; nfhg;gspj;jJ.

     

    ,y;Ny khg;is cd;wfpl;Nl nuz;L thh;j;ij NgNrhDkhk;kh..Ngr tpUg;gkh..D Nff;f nrhd;dhU.. rpjk;guk; gk;kpf; nfhz;Nl nrhy;y>tsh;kjpapd; Kfj;jpy; vjw;F vd;w Nfs;tpf;Fwp gpujpgypj;jJ.VNjh NahridAk; njhlh;e;jJ.

     

    rpy tpehbfs; jpfpYld; mikjpahff; fope;jJ. mts; Kfj;jpd; Nghf;ifg; ghh;j;jgbNa NfhkjpAk; rpjk;guKk; fhj;Jf; nfhz;bUe;jdh;.tsh;kjp VNjhnthU KbTf;F te;jJ NghypUe;jJ.

     

    rup NgrNwd;g;gh..tsh;kjp mikjpiaf; fiyj;jhs;.

     

    rup fz;Z.. vq;f nfsuijnay;yhk; eP NgrwJNyjhd; ,Uf;F.cq;fwJf;F Nrhwpy;Nyd;dhYk; khdk; kupahijNahl CUf;Fs;Ns ele;Jl;LUf;Nfhk;.jiyFdpa ntr;RwhNj.mg;Gwk; ehq;f cRNuhl

    ,Uf;fwJNy mh;j;jkpy;yhk NghapUk;. mt;Nshjhd; ,g;g nrhy;y KbAk;.. Nfhkjpapd; thh;j;ijfis fhjpy; thq;fpagbNa tPuKj;Jit Nehf;fpr; nrd;W nfhz;bUe;jhs; tsh;kjp.

     

    me;j kuepoypy; Jitf;Fk; fy;kPJ cl;fhe;jpUe;j tPuKj;J>jhd; vOe;J nfhz;L mtis cl;fhur; nrhy;yp iffhl;LtJk;>mts; kWg;gJk; njspthfj; njupe;jJ.mjw;Fg;gpd;dh; mth;fs; Ngrpf; nfhz;lJ fhjpy; tpotpy;iy.

     

    gj;Jepkplq;fs; fopj;J tsh;kjp Kfj;jpy; kpfj; jpUg;jpahf epytpa Gd;rpupg;NghL jpUk;gp tPl;il Nehf;fp tUtJ njupe;jJ.

     

    Nfhkjpf;Fk; rpjk;guj;jpw;Fk; ,Ug;G nfhs;s tpy;iy.mts; jq;fis neUq;fpaJk; vd;d nrhd;Nd..?vd;d nrhd;Nd.? ,Utupd; FuypYk; njwpj;jJ Mh;tk;.

     

    xz;Zkpy;Ny Nghk;kh..vd;W nrhd;dgbNa cs; miwf;F Xbdhs; tsh;kjp.

     

    mg;ghlh..VNjh ey;yJ ele;jpUf;fpwJ.jhq;fs; gj;Jehshf Nkw;nfhz;l Kaw;rpia gj;J epkplj;jpy; epiwNtw;wptpl;lhh; khg;gps;is

    khdrPfkhf kdJf;Fs; Fk;gpl;Lf; nfhz;lhh; rpjk;guk;.

     

    fhiy kzp ,d;Dk; Miwj;jhz;ltpy;iy. Njhl;lj;jpw;F fpsk;gpf; nfhz;bUe;jhh; rpjk;guk;. Nfhkjp..Fbf;f Vjhr;Rk; nfhz;L th Mj;jh.. jf;fhspr; nrbf;nfy;yhk; cuk; itf;f MSfis

    ,d;idf;F tur; nrhy;ypapUf;F.mtpnay;yhk; thuJf;F Kd;d Nghap ehk epf;NfhDkpy;Ny.!

     

    ,jh..te;Jl;NlDq;f..rikayiwapypUe;J Nfhkjp nrhy;ypf; nfhz;bUe;j mNjrkak;> “mz;Nz.. mz;Nz..vd;W thrypy; Fuy; Nfl;lJ.

     

    ,jh te;Jl;ldg;gh..vd;wgbNa ntspte;j rpjk;guk;>ehd;FNgh; epd;W nfhz;bUg;gijg; ghh;j;jhh;. “ahUg;gh..vd;d NtZk;.?

     

    mz;Nz..ek;k kuf;fil Kjyhsp fzgjp ma;ah mDg;gp tpl;lhUq;f..mth;fspd; iffspy; Nfhlhup>fapW>ntl;lupths; vd ,Ue;jijf;fz;l rpjk;guk;> “ek;k tPl;Lf;F Nkf;fhNy Nghw ,l;Nlup topah nkJth Nghapl;LUq;fg;gh..nfhQ;rk; njhiy Nghap tlf;Nf jpUk;Gdh ek;k Njhl;lk;jhd;.elq;f te;Ju;Nwd;..vd;w rpjk;guk;> jpBnud;W epidT te;jtuha; Vg;gh..

    cq;fSf;nfy;yhk; kj;jpahd NrhW ek;k tPl;NyNa nrhy;ypul;Lkh..?

     

    Ntzhq;fa;ah..ehq;fy;yhk; NrhW nfhz;L te;jpUf;Nfhk;..mg;Gwkh nfhQ;r Neuk; fopr;R VjhtJ BNah>fhgpj;jz;zpNah FLq;fa;ah.mJ NghJk;..>vd;wgbNa mth;fs; tPl;bd; gpd;Gwk; Nehf;fp elf;fj; Jtq;fpdh;.

     

    rpjk;guk;>Njhl;lj;jpw;F nrd;wNghJ>kuk; ntl;l te;j Ml;fs; ahNuh xU kdpjdplk; epd;W Ngrpf; nfhz;bUg;gJ njupe;jJ.mUNf xU Nkhl;lhh; irf;fpSk;.ml..ahuJ.ek;k khg;gps;isah..,th;

    ,q;Nf vd;d gz;whh;.?rpjk;guj;ijf; fz;lTld;  Ml;fs; Ke;jpf;nfhz;L nrhd;dhh;fs; kuq;fis ntl;lNtzhk;D ,th; nrhy;whUq;f.

     

    mth;fspd; Fuiyj; njhlh;e;J jpUk;gpa tPuKj;J> “thq;f khkh>fy;ahz nryTf;Fd;D jhNd kuq;fis ntl;b tpf;NfhDk;D epidr;rPq;f..mJ Ntzhk;..mjpy;yhk me;j NtypNahuk; ,Uf;fw ehY gidkuk;>MLkhL NfhopAk; $l ,g;g

    ,Uf;fw khjpupNa mg;bNa vdf;fhd fy;ahzr; rPuh ,Uf;fl;Lk; khkh.,J vd;Ndhl Mir kl;Lkpy;Ny.tsh;kjpAk; epr;raj;jd;dpf;F ,jhQ; nrhy;Yr;R. vd;Ndhl tUq;fhy nghz;lhl;bNahl thh;j;ijia eh kPwKbAkh khkh.?mjhd; ntl;Lwij epWj;jr; nrhy;ypl;Nld;.ePq;f fy;ahz nryT gj;jpnay;yhk; ftiyg;glhjPq;f..vy;yhk; eh ghj;Jf;fpNwd;.Gd;rpupg;NghL nrhd;d tPuKj;Jtpd; thh;j;ijfspy; ,Ue;j FSikia ms;spf; nfhz;Lte;j khkuq;fspd; fhw;W>rpjk;guj;ij rpy;yplr; nra;J nfhz;bUe;jJ.

     

    -----------Kw;Wk;-----------

                         -nghs;shr;rp mgp-

     

     


15 நவம்பர் 2023

கவிஞர் கே.எஸ்.அம்பிகா வர்ஷினி பார்வையில் பாட்டையா

 பொள்ளாச்சி அபி அவர்களின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பிது.முதல் கதைத் தொகுப்பு "எங்கேயும் எப்போதும்" வாசித்த நினைவுகளுண்டு.ஆதலினால் காதலித்தேன் நாவலின் மூலம் அறிமுகமாகியவர்.மிகச்சிறந்த நட்பாளர்.கிட்டத்தட்ட பதினோரு வருடங்கள் மரியாதைக்குரிய நட்பை பரஸ்பரம் உணர்ந்துகொள்ளும்படி அவ்வப்போதான உரையாடல்கள் இலக்கியச் சந்திப்புகள் என்று தொடர்கிறோம்.


எனக்கென சின்னப்பெருமை கூட தனது "ஆதலினால் காதலித்தேன் " நூலின் மூலம் அளித்தவரும் கூட.அந்நாவலுக்கு திறனாய்வின் அடிப்படையில் அணிந்துரை எழுதியிருக்கிறேன்.எழுதவந்த காலத்திலேயே அதற்கு வாய்ப்பளித்த அகன் அவர்களையும் இவ்விடம் நினைவுகூர்கிறேன்.


இன்னும் பொள்ளாசி அபி அவர்கள் கவிஞரும் கூட.தொகுப்பு எதிர்பார்க்கப்படுகிறது.


*******


பாட்டையா


மொத்தம் ஆறு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.ஒவ்வொரு கதையும் ஒரு கருத்தைப் பாவித்துச் சொல்லிவிடுகிறது.பாவித்தென்றால் வேடமணிவதோ அல்லது இல்லாத ஒன்றையோ சொல்லவில்லை.பாவித்தல் என்பது நளினம் சார்ந்தும் இயங்கக்கூடிய நுட்பம் வாய்ந்தது.அது ஒரு பாணி.ஆசிரியர் முன்னுரையில் அழகாக ஒரு விசயத்தை எடுத்தியம்பி அடிக்கோடிடுகிறார்.


"உரைநடையின் அற்புதமான வடிவங்களில் ஒன்று சிறுகதை. கதையின் மையக்கருத்துகள்,வாசிப்பவரின் ஏற்புக்கும் மறுப்புக்கும் உரியது என்றாலும் கதாசிரியனின் சுதந்திரமான கண்ணோட்டத்திற்கு சிறுகதை எவ்வளவு பெரிய இடமானாலும் தருகிறது."


முதல் கதை பாட்டையாவில் தொடங்கி கடைசியாக வினைப்பயன் வரையிலும் ஒவ்வொன்றும் இடறிக் கீழே தள்ளிவிடாத தன்னகத்தே கொண்டுள்ள கருத்தை விவரிப்பு மூலமாகவும் சிறிது பூடகங்களையும் தெளித்துக் காட்டுகிறது.


பாட்டையாவில் பறையிசை குறித்த விவரிப்புகள் இருந்தாலும் கூட பறையிசையின் தாளகதிகளுக்கு ஆடும் அனுபவசாலி பாட்டையாவின் வல்லமையைச் சுட்டுவதாக எடுத்துக்கொள்கிறேன்.


சஹாபியில் புதிய சொற்களைக் காணமுடிந்தது.சொல்லப்போனால் தொகுப்பு முழுக்க கதைகள் சொற்களை ஆர்ப்பாட்டமில்லாமல் கடத்திவிடும் சகஜமனநிலையைத் தோற்றுவிக்கின்றன.அதாவது இதுவரை நம் அன்றாட வாழ்வில் புழங்காத சொற்கள் கூட இக்கதைகளின் மூலம் அவை எடுத்தியம்பும் வாழ்வியல் சித்திரங்களின் மூலம் சாதாரணமாக வழக்கம்போல புழங்கக்கூடிய சொற்களாக கதைகளுக்குள் நம்மை இட்டுச் செல்கின்றன.உதாரணமாக இந்த வாழ்வில் சிலர் எவ்விதத் தொடர்புகளும் அன்றி உறவுகளாக அமைந்துவிடுவார்கள்

.பல உறவுகள் இதுபோன்ற தொடர்புகளிலிருந்து பிரிவினையை வெகுசீக்கிரமாகத் தந்துவிட்டுப்போகிறதுண்டு.ஆனால் சிலர் அப்படியில்லை.தான் ஏற்படுத்திக்கொள்ளும் உறவுகளையும் கண்ணியமாகக் கொண்டுசெல்லக்கூடிய பக்குவத்தை அடைந்திருப்பார்கள்.எந்த உறவுநிலைகளுக்கும் வேண்டிய உன்னதமிது.அப்படிக் கிடைக்கப்பெறுகிற யாரோ ஒரு தம்பி யாரோ ஒரு அண்ணன் போல அவர்கள் அக்கம்பக்கம் நட்புகள் ரீதியில் கிடைத்துவிடுகிற பந்தமாக இந்தச் சொற்களை எடுத்துக்கொள்கிறேன்.


சஹாபி இருப்பதிலேயே பெண்மனதை நுட்பமாக எடுத்துச்சொல்லும் தனித்துவமான கதைகளில் ஒன்றாகயிருக்கும்.


அரவாணிகள் குறித்துப் பொதுவாக அதிகம் வாசித்ததில்லை.ஆனால் அவர்களை எங்கும் காணநேரும் அனுபவங்கள் காட்சிகள் எனக்குள் உண்டு.அப்படி ஒரு கதாப்பாத்திரத்தை "ஒப்பனைக்காரன்" கதையில் கொண்டுவந்து முடிவை எதிர்பாராதவிதமாக அமைத்திருக்கிறார்.


மகிழம்பூ கதையில் ஆண்பெண் நட்பின் பல ஆண்டுகள் நீட்டிப்பைக் கௌரவப்படுத்தினாலும் ,இன்னொருவருக்காக ஜாமீன் கையெழுத்திடும் கதாப்பாத்திரமொன்றின் மனோநிலையைத் தொட்டு ஆட்டம் காட்டுகிறார்.


இடக்கைப் பழக்கத்தை எதிலிருந்து எதற்கென்று பூடகமாக ஒரு கருத்தைச் சொல்லி "வினைப்பயன்" சிறுகதையோடு முடிப்பதில் இத்தொகுப்பு வாசிப்பவரை இலகுவாக்கக்கூடிய பன்முகங்களைப் பெற்றிருப்பதாகவே உணர்கிறேன்.


இஸ்லாமியப் பின்புலமுள்ள கதைகளை வாசித்திருக்கிறேன்.இத்தொகுப்பில் இரண்டு கதைகள் அவ்விதம் வருவதாகயிருந்தாலும் அவர்கள் புழங்கக்கூடிய சொற்கள் சில பழக்கவழக்கங்கள் எல்லாமும் நாம் அருகிலிருந்து பார்த்தால்கூட அவர்களது வாழ்வியலின் சுகானுபவம் முற்றும் முழுதும் கிடைக்கப்பெறுமா தெரியாது.அல்லது அதுவும் நேரடியாகக் கிடைக்கப்பெறின் ஈடியணையற்ற போதை.கதைகள் மூலம் சொல்லப்படுகிற நாம் தெரிந்துகொள்ள முடியாத கட்டுடைப்புகள் வாழமுடியாத அல்லது வாழ அனுமதிப்பில்லாத சில வெளிகளை தரிசிக்க முடிகிறதென்றால் அவை எழுதிக்கொள்ளப்படுகிறது.


வாசித்துப் பாருங்கள்.ஆறே கதைகள் .ஒவ்வொன்றுக்குள்ளும் மென்னழுத்தம் சுழன்றபடியே நிற்கும்.


#பாட்டையா #பொள்ளாச்சி_அபி 


வெளியீடு:ஒருதுளிக் கவிதை

தொடர்புக்கு :9894602948


09 நவம்பர் 2023

பொள்ளாச்சி அபி அவர்களுடன் கலந்துரையாடல் ஜமுனா

கவிஞர் கவிஜியின் பார்வையில் பாட்டையா

 பாட்டையா - சிறுகதை தொகுப்பு ஒரு பார்வை- கவிஜி

***************************************************************************

"பாட்டையா"வில் ஆறு சிறு கதைகள். ஒவ்வொன்றும் ஆறு போல ஓடும் கதைக் களங்கள். 


கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் ஆசிரியரின் பலமே அது தான். தனித்து தெரியாத நிழல் போல கதை நெடுக வழி நடத்திக் கொண்டே வருகிறார். ஒரே மூச்சில் படித்து விட முடிகின்ற சின்ன நூல் தான். ஆனால் தாக்கம் பெரியது. தர்க்கம் பேசும் ஒவ்வொரு கதையும் தினமும் நடக்கும் வாழ்வின் தீவிரம். 


எளிய மனிதர்களின் சுலப வழிகளின் பாரம் பெரியது. அது பற்றி பேசும் ஒவ்வொரு கதையும் அபாரம். அபி சாரின் மொழி இலகு மொழி. நேரடியாக பேசிவிடும் வீறு நடை. பேருந்தில் காதும் காதும் வைத்தது போல பேசிக்கொண்டே சென்று விடும் தூரம்.


"பாட்டையா" என்ற முதல் கதை பறையைப் பற்றி பறை சாற்றுகிறது. பறை அடிப்பதில் இருக்கும் நுட்பம்... அது கொண்ட உப கருவிகளின் பெயர்கள்... அதன் நீட்சி...சதங்கையோடு கொண்ட ஆட்டம் என்று போகிற போக்கில் பறை பற்றிய எல்லாவற்றையும் வகுப்பெடுத்து விடுகிறார். பாட்டையா எனும் பெரும் மனிதனின் கலை  எப்பேற்பட்டது... அனுபவமில்லாத நாயகனின் வஞ்சமும் அதன் மூலம் அவன் பயிலும் கலையின் உயரமும்... இறுதியில் என்னவாகிறது என்று இலை மிதக்கும் நதி போல காட்டி விடுகிறார். அதில் ஒரு காதல்... காதலின் வழியே அரங்கேறும் அன்பின் பிடிப்பு. காதலை கூட சூசகமாக சூட்சுமாக வெளிப்படுத்தும் நாயகி.. அவள் யார் என்ற கதையின் முடிச்சு.. என்று கதை எங்குமே தடைபடவில்லை. 


தாகம் கொண்ட தேடலுக்கு பாட்டையாவின் ஆட்டமும் விடாப் பிடியும் பெரும் தீனி. 


பறை எதற்கெல்லாம் அடிக்கப்படுகிறது.. அதை எப்படி அடிப்பது.. அதன் நெளிவு சுழிவு என்ன... என்று அந்த சத்தத்தை கூட எழுத்துக்கு மாற்றி இருக்கும் வலிமை.. அபி சாரின் எழுத்தனுபவம். கையில் துண்டை பிடித்துக் கொண்டு முன்னும் பின்னும் கால்களை அசைத்தபடியே பாட்டையா ஆடும் ஆட்டம்.. கலை நேர்மை. எந்த காரியத்துக்கு எந்த சத்தம் தர வேண்டும் என்ற லயத்தின் லாடம் பற்றிய விவரிப்பு அட்டகாசம். தாள கதி... இதற்கு இது தான் என்பது தான் வித்தைக்காரன் சித்து. வேகம் கூட விவேகமும் கூட வேண்டும் கலைக்கு. அடித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தில் ஒருவர் இன்னொருவரை கண்களாலே... உடல் மொழியாலே... சூசகமாக புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல அடியின் போக்கை கொண்டு போக வேண்டும் என்கிற நுட்பம் அலாதி. எடுத்துரைத்த பாங்கு சிலாகிப்பு.


அடுத்த கதை  பெண்ணுரிமை பற்றியது. இஸ்லாம் சமூகத்தில் பெண்களுக்கு  எதிராக கால காலமாக நடக்கும் சில சம்பிரதாயங்களை முன் நிறுத்தி அதை திருத்தும் வேலையை ஒரு பெண்ணே செய்வதாக இருக்கிறது. வெகு அற்புதம். மாமியார் மருமகள் என்றாலே கண்றாவிகளாக சண்டையிட்டுக் கொண்டும் பனிப்போரில் சிக்கி சின்னாபின்னாமாகிக் கொண்டும் தான் இருக்க வேண்டுமா. மருமகளுக்காக நிற்கும் மாமியார். மாமியாருக்கு மகுடம் சூட்டும் மருமகள் என்று பெரும்பாடம்... கூடவே இஸ்லாம் சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கம் குறித்த கேள்வியும் இந்த  "சஹாபி" 


"ஒப்பனைக்காரன்" திருநங்கை உலகத்தை பேசுகிறது. மிக மெல்லிய கோட்டில் எழுத பட்ட கதை இது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே அர்த்தநாரியாக இருக்கும் நாயக பாத்திரப்படைப்பு வெகு நேர்த்தி. படபடவென கதைக்குள் இறங்கி விடும் மொழிக்கு அலங்காரம் தேவை இல்லை. இது அரிதாரம் பூசிய சிறுகதை வனப்பு. இறுதிக்காட்சியில் ஒரு சினிமா ஷாட். மறுநாளில் இருந்து ஊர்மக்கள் என்னாவாகிறார்கள் என்பது இயல்பென்றாலும்... இயல்பை சொல்லியும் எம் போன்ற வாசகனை திருப்தி படுத்தும் கலை அபிசாரின் கதை வளம்.


இந்தா... இப்ப வந்தரென் என்று சொல்லி ஓடி காணாமலே போன நண்பனை அறிவேன். எங்கும் எதிலும் உன்னை ஜெயிக்காமல் விட மாட்டேன் என்று சொல்லும் நண்பனை அறிவேன். சொல்வது ஒன்றுமாக செய்வது ஒன்றுமாக இருக்கும் நண்பனை அறிவேன். "மகிழம்பூ"வில் நட்புக்கு மாலையிடம் பாத்திரங்கள். நட்பாகவே வாழ்வை சூடிக்கொண்ட சித்திரங்கள். மனம் நெகிழ செய்த மகிழம்பூ ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான உறவு. நட்பு பாராட்டும் இந்த கதையில்... மெல்ல மெல்ல விடுபடும் திரை விலகும் காட்சிகள் அடுத்தடுத்து அட போட வைக்கும்.


யார் எங்கு போனாலும் அவரவர் மனம் தான் அவர். யார் எங்கு இருந்தாலும் அவரவர் குணம் தான் அவர்.... என்று "நெருப்புக்கு திசை இல்லை" போட்டு வாட்டி விட்டது. நேர்மையின் வீரியம் யாஸ்மினிடம். சாமியின் குளறுபடி அவன் அண்ணனிடம். மற்றபடி மீண்டும் ஒரு காதல் கதையும் உள்ளே இருக்கிறது.


"வினைப்பயன்" கதை... இந்த நூலில் சற்று வித்தியாசமானது. கதைக்களமே வேறு. படிக்க படிக்கவே யூகித்து விட்டாலும்... உன் கை ஒருவர் மீது படிக்கிறது என்றால் இன்னொரு கை உன் மீது படியும் என்று சுற்றி வளைத்து வாழ்வின் ஸ்திரத்தை சித்திரமாக்கி காட்டி விட்டார். இன்றைய குடும்ப வாழ்வின் பெரிய பிரச்சனை பற்றிய அறிவியல் தீர்வு அலசப்பட்டிருக்கிறது. அவசியம் தான்.


எப்படி பார்த்தாலும் "பாட்டையா" தான் எனக்கு இந்த நூலில் ஆகச் சிறந்த கதையாக தெரிகிறது. 


முத்து வீரனின் ஓரடி இரண்டடி மூன்றடி....பறை அடிக்கேற்ப ஆடிக் கொண்டிருப்பது பாட்டையா மட்டுமா என்ன..  படித்துக் கொண்டிருக்கும் இந்த ஏட்டய்யாவும் தான். இந்த நாளை இனிய நாளாக்கிய "பாட்டையா"வுக்கு நன்றிகள். நூலை அனுப்பி வைத்து இந்த கொண்டாட்டத்தை எனக்களித்த எங்கள் அபி சாருக்கு வாழ்த்துகள்.


பேரன்புகள் சார்.


கவிஜி


நூல் :  பாட்டையா

ஆசிரியர் : பொள்ளாச்சி அபி 

வெளியீடு : ஒரு துளிக் கவிதை - புதுவை 

நூலுக்கு : 98946 02948


30 அக்டோபர் 2023

ஓவியர் தயானியின் பார்வையில் பாட்டையா

 #பட்டாம்பூச்சிநூல்அறிமுகம்


அன்பு பட்டாம்பூச்சி உறவுகளுக்கு வணக்கம் நமது பட்டாம்பூச்சி தளத்தின் எழுத்துப் பயணத்தில் தொடர்ந்து பதிவேற்றி வரும் நம் சககால படைப்பாளிகளின் நூல் குறித்த அறிமுகத்தில் ...

இன்று அன்பிற்கினிய எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் சமீபத்தில் வெளிவந்த பாட்டையா சிறுகதை தொகுப்பு குறித்து அழகிய பார்வையில் அழகிய வாசிப்பில் கவிஞரும் ஓவியருமான தயானி அவர்கள் சிறப்பாக பதிவேற்றம் செய்கிறார்....


வாழ்த்துக்களும் அன்பும்......


நூல் : பாட்டையா

********************

நூலாசிரியர்: பொள்ளாச்சி அபி அவர்கள்.

*******************"

ஆறு சிறுகதைகள்

 அடங்கிய இந்நூல்... மிகவும்

சிறப்பானது.

வாழ்வியலின்

மகிழ்வும்

வலியும்

நம்மை கடந்து செல்லும் மாந்தரின் வாழ்வியலை

கூர்நோக்கிய

அறிவு...தன்

செவ்வியலை

எழுத்தாக்கி

ஆறு நட்சத்திரங்களை நம் கைகளில் மின்ன வைத்திருக்கும்

ஒளிப் பூக்களை

படைத்த...

பொள்ளாச்சி அபி அவர்களை

பாராட்ட வார்த்தைகள் இல்லை.

கதை சொல்லும்

பாங்கில்-எது

எடுத்துக்கொள்ள

வேண்டுமோ

அதையே

கதையின்

முக்கிய சாரமாக

அது... மானுட நீதி.

அவரின் கதைகளில் உலவும் மாந்தர்கள்...நுட்பமான மானுட

தீபங்கள்.அது காற்றில் அசைந்தாடும்

போதும்

மனது அமைதிபெறும்.

இருளையும் விரட்டும்.

மூடநம்பிக்கையை கொளுத்தும் தீப்பந்தத்தின்

தொடக்கப் புள்ளியாக

மின்னும் கதைகள் -அபி அவர்களின்....

நுட்பமான பார்வையை

வாழ்வியலின் மீதும் தீராத நம்பிக்கையையும்... முரண்களின் எதிர்ப்பில் நீதியை கைவிடாத மனமும் சுடர்விடுகிறது.

இந்த நூலின் தலைப்பே... ஆறடி உயரமும் முண்டாசுபனியனும், தார்பாய்ச்சிய வேட்டியும் தும்பைப்பூ தாடியும் மீசையும் அகலமான மார்பும், நீளமான கைகளும் கொண்ட , எழுபத்தாறு வயது, உழைப்பாளி

பாட்டையா தான்.

முத்து வீரன் ஒரு இளைய தலைமுறை ஆண் மகன்.

ஒரே காட்சியில்

ஒரே நேரத்தில்

வாழ்வின் மேடையில்.. சந்தித்தாலும்

பாட்டையாவின்

நடனமும், நுட்பமும், முத்து வீரனுக்கு பொறாமையும்

எரிச்சலையும் ஏற்படுத்தினாலும் தன் காதலி செல்விக்காக

பொறுமை காக்கிறான்.

பெரியவர் பாட்டையாவின் ஜமாப்பு செட்டு ஆட்டத்திற்கு

எல்லோருமே அடிமை. அத்தனை நுட்பமும் நளினமும் அவரை தலைமையாக ஏற்கத்துணிகிறது .இசைக்கலைஞர்களின் குழுவுக்கு.

நடுநாயகமாக....எல்லா இசைக் கருவிகளையும் வரிசைப்படுத்தியுள்ள பேரழகு.

எளிய மானுடவாழ்வின் இசை தான்

எல்லாவற்றிற்கும் ஆதாரம்.

பறை என்பது பேசும்.

அந்த மொழியை

உரக்கப் பேசு.

முதலில் உனக்கு அந்த மொழி புரியாவிட்டால்

அதை... மக்களுக்கு

எப்படி மொழிபெயர்ப்பாய்? செய்தியை ... என்பது

பாட்டையாவின் கேள்வி.

அவமானம்தான்

ஒருவனை செதுக்கும் என்பதற்கு முத்து வீரன் ஒரு உதாரணம்.

கனமான காற்சதங்கை-வெள்ளை ஈரிதழ் துண்டு என காட்சிபடுத்தும்போது- பாட்டையா கெம்பீரம்.முத்து வீரனும் செல்வியை

கை பிடித்தானா

என நீங்கள்

கதையை படித்து அறிந்தால்

சுவராஸ்யம்.

சஹாபி - போன்ற கதையை எழுத துணிவு அவசியம். அது

அபி அவர்களின்

எழுத்துசாதித்துவிட்டது. நாம்

அறியாத ஒரு விடயம் - அதுவும்

முகமதிய வாழ்வியல் - அவர் நுட்பமாக

நகர்த்தும் கதை இந்த புத்தகத்தின்

மகுடம்.

பாத்திமா என்ற தாய் - தன்

நேர்மையான கேள்வியால்

ஜமாத்து மக்களை வாயடைக்க வைக்கிறாள்.

தன் மருமகளை

திருமணம் செய்ய

வழக்கமாக எழுதும்

500 - 50,000

என எழுதச் சொல்லும் அவளின் கணவனின் சேமிப்பாக அதை தன் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு வைப்புதொகையாக அறிவிக்கத் தயங்கும்

பெரிய தலைகளுக்கு

மஹர் (வரதட்சணை வாங்குவது குற்றம் என அல்லாவின் வார்த்தையை) முன்வைத்து

5 பவுன் - ஐய்யாயிரம்

10 - பவுன் - பத்தாயிரம் என வாங்கும் திருமண பந்தங்கள் - பதிவு செய்வது வழக்கமாக - 500 தான்.

அதை உடைக்கும் பெண்ணின் நீதியை

ஏற்கத்தயங்கும்

மனிதர்கள்.

தன் தாய் அதிகமாக பேசியே பார்க்காத

மகன் - மணமகன் முகமது அலி சாதாரண பழைய இரும்பு சேகரிப்பு-லோடு பிடித்துக் கொடுக்கும் வேலை. வருமானம் நிரந்தரம் கிடையாது.

தன் மருமகள்

இறை பக்தியில்

நிறைந்து இருப்பதால்

அவளையே தன் மருமகளாக்க துணிகிறாள் பாத்திமா.

தன் குழந்தைக்கு

தன் மாமியார்

பெயரையே

சூட்டத் துணியும் அவள் சொல்லும் காரணம்,

புதிய தலைப்பு கதையின் தலைப்பாக

மிளிருகிறது,

நவரத்தினக்கல்லாக.

மூன்றாவது சிறுகதை

ஒப்பனைக்காரன்.

இந்த உலகமே

வெறுத்தாலும்

தாய் வெறுத்து

ஒரு பார்வை

பார்வை பார்த்துவிட்டால்

ஒரு மனம்

என்ன விலை தந்தாலும்

அதைஏற்காது.

தன் உயிரையே

பரிசாகத் தரும்

அந்த உள்ளம்

ராதாகிருஷ்ணன்.- எனும்

அன்புக்கு ஏங்கிய உள்ளம்.

பொன்னரளிக்காய்களோடு

முடியும் ஓசைகளும்...

வாழ்வும்.

அர்த்தநாரீஸ்வரராக அரிதாரம்

பூசும் உயர்ந்த

இடத்தில் இருக்கும் பெரிய மனிதனுக்கும்

காமம் எனும் பாம்பை

தலைவிரித்தாட விட்டு

அல்பமாய் அலையும்

அற்ப மனிதர்களால்

தான் வாழ்வு

தன் கடைசித் துளியை

தேடுகிறது.

இறைவனேயானாலும்...

தொட்டுப்பார்க்கும் புத்தி மனிதன் ஒரு சல்லிப் பயல் என்பதை

உலகம் நிரூபிக்கும்

கணம்

கொடூரமானவை. இந்த உலகத்தில் நடமாடும் ஒப்பனைக்காரர்களின் முகமூடிகளில்

ஒளிந்திருக்கும்

விஷம் ஒரு துளிதான்.அது

பொன்னரளிக்காய்களை விட

கசப்பானது.

டி.எம்.எஸ் குரலில் பாடினால் சுசீலாவின் குரல்

அல்லவா வருகிறது.- என்பவனின் வாழ்வியல் துயரம் என்பது

நாம் அறியாதது.

ஒருவரின் மரணத்தில்தான்

தெய்வங்கள்

உயிர்த்தெழுகின்றன.

மறந்துவிடுவதற்காகவே

இறைவனை

பற்றிக்கொள்ளும் இலாவகம்

ஒரு மாய உறவின் உலகம். பொய்மைகளை

மண் கொண்டு

மூடாது

மூடர்கள்... அதையும்

இறைவனாக்கி

மண்மூடும் இலாவகம்

மானுட வேஷம்.

கண்ணீரை வரவழைத்த கதையிது.

மகிழம்பூ கதையில்

வரும் கணேசன்

நம் நண்பனாகவும்

இருக்கலாம். கமலம் பைனான்ஸ்

அழைப்புகள்

ஒரு மனிதனை

என்ன பாடுபடுத்துகிறது. ஒரு மரணம்

முற்றுபெறும் தருணம்

கடன்கள்

உயிர்த்தெழுகின்ன்றன.  இது சத்தியமான

வார்த்தை. பொள்ளாச்சி அபி அவர்கள்

எழுத்து கற்சிற்பமாக

எழுந்து நிற்கிறது. மானுட உலகம்

எதையும் கண்டுகொள்ளாமல் கடந்துவிட

பழக்கப்படுத்தப்படுகிறது - பிரேமா - ரவி - கணேசன் நட்பில்... திட்டுக்கள்

வாங்கினாலும்

உதவுவதை நிறுத்த முடியாத

வெள்ளந்தி தனமே தன்னியல்பு

மாறாத கணேசன்.

நட்பு - கைவிடாத

நட்பு - புரிதல் -

அற்புதம்.

குடும்பம் நிராகரிக்கும்

நிமிடம் ,நட்பு

மகிழம்பூவாக

மலர்ந்து மணம் வீசுகிறது.

அற்புதமான திருப்பம் நிறைந்த கதை.

நெருப்புக்கு திசையில்லை-.அருமையான அடுத்த சிறுகதை தலைப்பு.

அற்புதமான இளைய தலைமுறையின்

மனநிலையை

மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் அபி

அவர்கள்.

பெண்கள் தவறுகளை

மன்னித்துவிடுவார்கள்.

பெண்மை எப்போதும்

கூட்டைவிட்டு பறந்த பறவை

நன்றாக இருக்கிறதா?- என்ற கவலை யோடு

நலம் விசாரிக்கும்.

ஆண் அப்படியல்ல.

குடும்ப கௌரவம் தலைகுனிய வைத்த காதலை

ஒருபோதும்

ஏற்பதில்லை. இப்போதும்

இது சாதீய கட்டமைப்பை மீறும்

இளம்பெண்

மீண்டும் தாய் வீட்டுக்கு வந்தபோதும்

பழைய நினைவுகளைத் தேடியே வருகிறாள்.

தன் வாப்பா அந்த கவலையில் இறந்துவிட்டதாக கவலைப்படும் ரஹீம் ,துவா பிள்ளைகளே செய்ய வேண்டும் எனும் வரை முறையில் உள்ளே நுழையும் தங்கை_யாஸ்மீன்-ஹஜ்ரத் வர

தாமதமானதும்

அவளே

கணீர் குரலில்

துவா - செய்வதை

வாயடைத்து பார்க்கும் ரஹீம் அண்ணன்-காதலுக்கு திசையில்லை-

நெருப்புக்கும்

திசையில்லை என்பதை

புரிந்திருப்பான்.

வினைப் பயன்- கடைசி சிறுகதை.

மனதை என்னவோ

செய்த அழுத்தமான கதை.

ஊருக்கு

ஒதுக்கு புறம்

ஒதுக்கிவைக்கப்பட்ட குடிசைகள்

எரிவதும்

காலில் விழும்படிக்காத ஜனம் - அதையும் மீறி

சென்னை வந்து

படித்து விட்ட

இளைஞன்

சாதீய கட்டமைப்பில்

எவ்வாறு நிர்பந்திகப்படுகிறான்.

கோர்ட் - போலீஸ்

எல்லாம்

ஊர் கட்டுப்பாடு

க்கு பிறகுதான். பெரிய மனிதர்கள்

தங்கள் அதிகாரத் தொனியையும்

மழிக்க வேண்டிய காலம்

வந்துவிட்டது. செவனோ க்ளாக் பிளேடால் அல்ல. அறிவால்.

எறும்பும் யானையும்

இந்த உலகத்தில் வாழ உரிமையுண்டு.

உருவம் பொருட்டல்ல.

செயல்களால் தான் உயரவேண்டும்.

பட்டங்களால்

தோற்றத்தால் அல்ல.

சமமாக தாகம் தீர்க்கும் குணத்தால்.

ஊனமான எண்ணங்களை சுமக்கும் ஆஜானுபாகுவான தோற்றம்தான்

உண்மையான ஊனம்..

உடல் ஊனம்

இதயத்தை

ஊனமாக்காது. கருப்பசாமியே

கடைசி தலைமுறை....ஊர் கட்டுப்பாட்டில். குழந்தை

அவினாஷ்...

இக்கதையின்

முடிச்சை அழகாக அவிழ்த்துவிடும்

தளிர் கைகள்.

வாழ்க அறிவியலின் முன்னேற்பாடுகள்.

ஒழியட்டும்

ஏற்றத்தாழ்வுகள். வாழ்க சமத்துவம்

வாழட்டும்

மானுட நீதி. -

#############

வெளியீடு: ஒரு துளிக்கவிதை....

############


- பட்டாம்பூச்சி குழுமம் 

பட்டாம்பூச்சி

கவிஞர் பிரியா பாஸ்கரன் பார்வையில் பாட்டையா

 ஒவ்வொரு ஆன்மாவும் சமத்துவத்திற்குத் தகுதியான ஆன்மா!

**************************************************


சிறுகதைகள் இலக்கிய நிலப்பரப்பில் சிதறிக்கிடக்கும் ரத்தினக் கற்கள் போன்றவை. கண்டுபிடிக்கக் காத்திருக்கும் 

ஒவ்வொன்றும் தனித்தனியான மற்றும் மெருகூட்டப்பட்ட நகைகள்.  சுருக்கமான கதைகள் இலக்கியப் பொக்கிஷங்கள். அவை ஒரு தனித்துவமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகின்றன. இது மனித உணர்ச்சிகள் மற்றும் கற்பனையின் பகுதிகள் மூலம் புதையல் வேட்டையில் இறங்குவதைப் போன்றது.


ரத்தினக் கற்களைப் போலவே, சிறுகதைகளும் பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் வருகின்றன.  சிலர் நகைச்சுவையுடன் மிளிர்கிறார்கள். சிலர் மர்மத்துடன் மிளிர்கிறார்கள். சிலர் ஆழ்ந்த ஞானத்துடன் பிரகாசிக்கிறார்கள். இன்னும் சிலர் யதார்த்தத்தை உணர்வுகளில் வடிக்கிறார்கள். 


ஒரு ரத்தின சேகரிப்பாளர் மிகவும் அரிதான மற்றும் மிக நேர்த்தியான கற்களை உன்னிப்பாகத் தேடுவது போல, வாசகர்கள் தங்கள் இதயங்களையும் மனதையும் எதிரொலிக்கும் சிறுகதைகளைத் தேடுகிறார்கள்.


அவ்வாறான தேடலில் கண்டடைந்த தொகுப்பு சமீபத்தில் வாசித்த, ஒருதுளிக்கவிதை வெளியீடான #பாட்டையா என்ற சிறுகதைத் தொகுப்பு எனச் சொல்லலாம். 


சிறுகதையானது ஒரு நுட்பமான பதக்கத்தை உருவாக்கும் கலைக்கு ஒப்பானது. ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வாக்கியமும், உன்னிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கச்சிதமாக வைக்கப்பட வேண்டும். ஒரு திறமையான நகைக்கடைக்காரர் போல, எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்கள் கதையை வடிவமைத்திருக்கிறார். அதன் உள் அம்சங்களையும் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.


ஆறு சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் என்னை மிகவும் பாதித்த இரண்டு கதைகளைப் பகிர்ந்துகொள்கிறேன். 


ஒன்று.. “ஒப்பனைக்காரன்” என்ற கதை. 14 வயதான ஒரு இளைஞன் தன் உடலில் ஏற்படும் மாற்றத்தினால், அதாவது ஆணாகப் பிறந்தவனின் உடல் கூறுகள் ஒரு பெண்ணின் உடல் கூறுகளாக மாறுவதால் ஏற்படும் அவமானங்களையும், தன் தாய் தந்தையரே ஏளனப்படுத்தியதால் தற்கொலைச் செய்து கொள்ள நினைக்கிறான். 


அப்பொழுது ஊர்த்திருவிழாவில் நடக்கும் கூத்தில் அர்த்தநாரீஸ்வரராக வேடம் அணிந்தவரைப் பார்த்த பொழுதில், தானும் அது போல ஒப்பனையிட்டுக்கொள்ள, கூத்துப்பட்டறையின் ஒப்பனைக்காரனைச் சந்திக்கிறான். 50 வயதுக்கும் மேலான அந்த ஒப்பனைக்காரனும் அவனுக்கு ஒப்பனை செய்யச் சம்மதிக்கிறான்.  ஹரிகிருஷ்ணன் என்ற தன் பெயரை இராதாகிருஷ்ணன் என மாற்றிக்கொண்ட அந்தச் சிறுவனும் 

அன்று தன் அம்மாவே தன்னை அடித்ததினாலும், அப்பாவும் விளாசித் தள்ளிய அயர்ச்சியில் கண் மூடி அமர்ந்திருக்கிறான். 


ஒப்பனை வேலையை முடிந்தபிறகு, 

திடீரென தனது மார்பகத்தில் அழுத்தமாக ஊறிக்கொண்டிருக்கும் ஒப்பனைக்காரனின் கைகளில் திடுக்கிட்ட எழுந்த அச்சிறுவன் அவனைத் தள்ளி விட்டு தனது தந்தை, தாய் தன்னை அடித்தது போல அடித்து மிதிக்கிறான்.


“உங்களை மாதிரிதான் நாங்களும் மனுஷங்கன்னு மதிக்கமாட்டீங்களா..? எல்லோரையும் எப்படி மதிக்க வைக்கணும் எனக்குத் தெரியும்டா.. தூ.. நாய்களா!” 


எனச் சொல்லிவிட்டுச் செல்பவன், தனது ஊர் எல்லையின் அரசமரத்தடியில் வேல் கம்பு ஊன்ற அரளி விதையை அரைத்துவிழுங்கி, நின்ற நிலையில் நீலம் பாரித்து இறந்துகிடப்பான். சில மாதங்கள் கழித்து அவன் இறந்த இடத்தில் 6 வேளையும் பூஜை நடக்கும் கோயிலொன்று எழும்பி இருக்கும் என முடித்திருப்பார் ஆசிரியர்.


கதைக்களத்தைச் சொற்களின் இலாகவத்தால் நகர்த்திய விதத்தில் கண்முன்னே காட்சிகளாய்

விரிந்ததில் நீர்த்திரையிட்டு மிதக்க, வாசித்தக் கண்களும் மனதும் கனத்து போனது வெகு உண்மை. 


திருநங்கைகள் அடையாளம் என்பது மரபுக்குக் கட்டுப்பட்டதல்ல.  மாறாக, சுய கண்டுபிடிப்புக்கான ஆழ்ந்த தனிப்பட்ட மற்றும் தைரியமான பயணமாக இருக்க வேண்டும் என நினைப்பவள். ஆனால் இந்தச் சமூகம் அதற்கு பெரும்பாலும் ஒத்துழைப்பதில்லை. வெகு சிலரே அதனைக் கடந்து நல்ல முறையில் இச்சமுதாயத்தில் ஜொலிக்கிறார்கள்.  ஹரிகிருஷ்ணனை அவனது குடும்பம், அவனை இராதாகிருஷ்ணனாக ஏற்றுக் கொண்டிருந்தால் கல்லாகச் சமைந்து தெய்வமாக நிற்க வேண்டிய அவசியமில்லை. ஆகத் திருநங்கைகளுக்கு, இச்சமுதாயம் கொடுத்திருக்கும் தகுதி உயிரற்ற கல்லாக இரு.. இரு கரம் குவித்து உடல் பணிந்து  தெய்வமாகக் கூட வணங்குவோம் ஆனால் 

சதையும் இரத்தமும் கொண்ட மனிதராக மட்டும் இருக்கத் தகுதியில்லை என்பதா..? என்ற கேள்வியை எழுப்பி மனதில் பெரிய துறுகலை ஏற்றி வைத்தது என்றால் மிகையல்ல..


அடுத்த கதை.. “வினைப்பயன்”.  இந்தக் கதைக்களத்தில், திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத தம்பதிகள். கணவனுக்கு விந்து பரிசோதனை செய்ததில், விந்தின் counts கம்பியாக உள்ளன எனத் தெரியவருகிறது. விந்து donor மூலம் கருத்தரிக்கும் optionயை பழமைவாதியான பெரிய ஊர்தனக்காரரான மாமனாருக்கு முழு விவரமும் சொல்லாமல் தம்பதிகள் treatmentக்குச் செல்ல ஆண் மகவு ஒன்று பிறக்கிறது. 


இரண்டு வருடங்கள் கழித்து பேரனுக்கு பிறந்த நாள் கொண்டாட மாமனார் அழைத்ததின் பேரில் கிராமம் செல்கிறார்கள். அங்குச் சேரியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், சேரியில் தண்ணீர் வரவில்லை என ஊர்கோவியில் நீர் சேந்தி அனைவருக்கும் தர, ஊர்க்காரர்கள் கொதித்தெழுகிறார்கள். பஞ்சாயத்தில் வாய்ச்சண்டை எழ, இடது கைப்பழக்கம் உள்ள இளைஞன் தன்னை அடிக்க வருபவர்களை இடது கையால் வீழ்த்துகிறான். ஊர்த்தனக்காரர், எச்சரித்து சண்டையை நிறுத்த, இளைஞனின் அப்பா அவரின் காலில் வீழ்ந்து,


“சரிங்க சாமி உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும்..” என மன்னிப்பு கேட்டுக்கொள்ள, இளைஞன், “தனது தாயை இடது கையில் தாங்கியபடி சேரியை நோக்கிச் செல்கிறான்..”


இந்தக் களேபரங்கள் எதுவும் தெரியாது

தனது மகளின் மடியில் படுத்துறங்கும் பேரக்குழந்தை ஒரு பொம்மையைத் தனது இடது கையால் பிடித்துக்கொண்டு உறங்குகிறது என்பதை அறியாத ஊர்தனக்காரர் காரை நோக்கி வருகிறார். அவனுக்கும் அதே இடது கைப்பழக்கம்.. 


இதனை வாசித்த பொழுது, மகள், மருமகனின் மொத்த சந்தோஷத்திற்கும் காரணமான அந்த முகமறியா Sperm donor அதே இளைஞன் தான் எனத் தெரிந்தால் என்ன செய்வார் பெரிய தனக்காரர்..? 


இந்தக் காலத்திலும் இன்னும் சாதி வேறுபாடுகள் ஊறிப்போய்க்கிடக்கின்றன. சாதிவெறி என்பது மனிதக்குலத்தைப் பிளவுபடுத்தும் ஒரு கொடிய நோய். ஒரு மனிதனின் தகுதியை அவனது குணத்தால் அளக்கப்படும் உலகத்திற்காக நாம் பாடுபட வேண்டும் என்பதையும், இதனை இளைய தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்கும் கடமை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்பதனையும் சிந்திக்க வைத்த கதை.


கதைக்களங்கள் சாதாரணமாக இருந்தாலும், கதை நகர்தலும், கதை மாந்தர்களின் வட்டார வழக்கிலிருந்த உரையாடல்களும், ஒவ்வொரு கதையின் இறுதி முடிவும் வித்தியாசமாக அமைந்திருந்த விதமும் தொகுப்பை ஒரே மூச்சில் உட்கார்ந்து வாசிக்க உந்தின.   


தொகுப்பின் தலைப்பான “பாட்டையா” என்ற சிறுகதை தான் தொகுப்பின் முதல் கதை. எனக்கு மிகவும் பிடித்த பறை இசையையும், நாட்டுப்புற நடனத்தையும் வெகு சிறப்பான சொற்களில் இசைக்கவும், ஆடவும் வைத்துள்ளார். மிகவும் இரசித்து வாசித்தேன்.  


ரத்தினக் கற்கள் நமது கிரகத்தின் புவியியல் வரலாற்றைப் பற்றிய பார்வைகளை வழங்குவது போல, சிறுகதைகள் பெரும்பாலும் மனித அனுபவத்திற்கான சாளரங்களாகச் செயல்படுகின்றன. இந்த கதைகளின் மூலம், வாசகர்கள் மனித உணர்வுகளின் ஆழம், உறவுகளின் சிக்கலான தன்மை மற்றும் வாழ்க்கையின் ஆழமான மர்மங்களை ஆராய முடியும். சில பக்கங்களுக்குள் பல்வேறு அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் வழங்கின இச்சிறுகதைத் தொகுப்பு.


See a human being as a human being, a soul deserving of respect, love, and equality, regardless of the labels we create என்ற எண்ணத்தை ஒவ்வொரு கதையும் வலியுறுத்துவதாகக் கருதுகிறேன்.


யதார்த்தமான கதைக்களத்தில் நிறையச் சிந்தனைகளைத் தூண்டிய எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள். 


நூல் வாங்க: agan123@gmail.com

விலை: ரூ. 125/-


பிரியா பாஸ்கரன் I 10.29.23.

08 அக்டோபர் 2023

நிலாசூரியன் பார்வையில் பாட்டையா

 பாட்டையா சிறுகதை தொகுப்பு பற்றிய கவிஞர் நிலாசூரியன் -தச்சூர்   அவர்களின் 

கருத்து.

--------------------------------


முதலில், முனைவர் ஐயா அகன் அவர்களுக்கு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


இது விமர்சனமல்ல, ஒரு வாசகனாக எனது கருத்தை இங்கு பதிவு செய்கிறேன். 


அண்ணன் பொள்ளாச்சி அபி அவர்களின் எழுத்துக்களை வாசிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன் நான், ஏனெனில், ஒப்பனை வார்த்தைகளால் கதையை அலங்கரிக்காமல், சாதாரண வார்த்தைகள் மூலம் யதார்த்தங்களை விளக்குவதில் அவருக்கு நிகர் அவரே...


ஒரு வாசகனை சிரமபடுத்துவதையோ, ஒரு வாசகன் அதிகப்படியான நேரத்தை தனக்காக செலவிடுவதையோ அவர் ஒருபோதும் விரும்பியதில்லை. அதுபோலவே தனது கதையை வாசிக்கும் யாரும் உறங்கிவிடக்கூடாது மாறாக உள்ளுணர்வில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்குமென்று நம்புகிறேன். அதற்கு இந்த பாட்டையா சிறுகதை தொகுப்பேச் சான்று. 


நூறு இருநூறு என்று பக்கங்கள் நீளாமல் ஆறு சிறுகதைகளை எழுபத்தைந்து பக்கங்களில் கச்சிதமாய் நிரப்பி வைத்து இருக்கிறார்கள். அதனால் உற்சாகம் குறையாமல் வாசிக்க முடிந்தது.


மனிதன் முதன்முதலில் கண்டுபிடித்த இசைக்கருவி பறை, அந்த பறையிலிருந்து இசைக்கப்படும் ஒத்த அடி, ரெட்ட அடி, மூன்றாம் அடி என்று மொத்த அடிகளைப் பற்றியும், அதற்கான நடனங்களைப் பற்றியும் எனக்கு தெரியாத நிறைய செய்திகளை பாட்டையா சிறுகதையில் அறியமுடிந்தது,  பறையிசை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும் இசைக்கும் இசையாகவோ, குறிப்பிட்ட சடங்கிற்கு மட்டுமே இசைக்கும் இசையாகவோ இல்லாமல் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனைவராலும் முழங்கப்பட வேண்டிய இசையாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆவல். 


ஆடி ஆடி உடம்பெல்லாம் உரமேறி வைரம் பாய்ந்த கட்டையான பாட்டையாவை வீழ்த்துவதற்கு மூன்று மாதங்களாக ஊர் ஊராய் திறிந்து, பறையிசை முழங்கிய பல திறமைசாலிகளிடம் நிறைய நூணுக்கங்களை கற்று அந்த நுணுக்கங்களை எல்லாம் தனது பறையிசையில் புகுத்தி பாட்டையாவை வீழ்த்த முயற்சித்த முத்துவீரனின் எண்ணம் குறுகியதென்றாலும் அவனது முயற்சி மிகவும் போற்றதக்கது.  உண்மையிலேயே பறையிசையில் காலத்திற்கு தகுந்தாற்போல் பல நுணுக்கங்களை புகுத்தி அந்த இசையை மேலும் செம்மையடையச் செய்ய பறையிசை அறிந்த மேதாவிகள் முன்வர வேண்டியது அவசியமாகும்.


சஹாபி..


மணமகன் பெண்ணுக்கு வழங்க வேண்டிய மஹர் தொகையாக ஐம்பதாயிரம் தருகிறேன் என்று பாத்திமா சொன்னதை ஏற்க மறுத்த ஆணாதிக்க கூட்டம், அவளை பொருட்படுத்தாமல் போன அன்றுமுதலாகத்தான்  அவள் மெளனமாகிப் போயிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 


ஆணாதிக்கம் என்பது ஒவ்வொரு மதங்களிலும் ஒவ்வொரு சாதிகளிலும் வேரோடி விரவி கிடக்கிறது, அந்த வேரை அறுக்கும் ஆயுதமாக இக்கதையில் அண்ணன் பொள்ளாச்சி அபி அவர்களின் எழுதுகோல் வினையாற்றி இருகிகிறது, பெண்ணை அடிமைபடுத்துவது ஆணாதிக்கம் என்றாலும் அதே ஆண் சமூகம்தான் பெண் விடுதலைக்காகவும் போராடுகிறது என்பதை இங்கு நான் நினைத்துப் பார்கிறேன். 


சஹாபி கதையின் நாயகி பாத்திமாவின் செயல்பாடுகள் நெஞ்சில் நெகிழ்வை தருகிறது, கதையின் முடிவில் தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு நான்தான் பெயர் வைப்பேன் நீங்க சும்மா குதிக்காதீங்க என்று தன் கணவன் முகமது அலியை அடக்கிவிட்டு, தன் குழந்தைக்கு தனது மாமியார் பெயரான பாத்திமா என்ற பெயரை சூட்டி ஒரு நொடி பொழுதில் நெஞ்சில் ஆழமாக பதிவாகிவிடுகிறாள் ரகமத்துன்னிச்சா. 


முற்போக்கு சிந்தனையும் சமூக அக்கறையும் கொண்ட அண்ணன் பொள்ளாச்சி அபி அவர்களின், இந்த பாட்டையா சிறுகதை தொகுப்பு சமூக அவலங்களை தோலுரிப்பதோடு சமூக அக்கறையும், மனிதகுல மேன்மையையும் வெளிபடுத்துவனாக இருக்கிறது. 


சஹாபி கதையின் முலம் பெண்ணடிமை தனத்தை அம்பலபடுத்திய ஆசிரியர், ஒப்பனைக்காரன் சிறுகதை மூலம் திருநங்கையாக மாறிவரும் ஒரு இளம்வயது சிறுவனை அவனது பெற்றோர்களே இழிவாகப் பேசி அடித்து விரட்டுவதும், அதனால் அவன் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதும் என்று இந்த சமூக இழிவை கதையின் மூலம் தோலுரித்து காட்டுகிறார். 


மகிழம்பூ சிறுகதை மூலம் நட்பின் உன்னதத்தை உயர்த்தி பிடிக்கும் ஆசிரியர் அவர்கள், நெருப்புக்கு திசையில்லை என்ற சிறுகதையில் மனங்கள் இனைந்துவிட்டால் மதங்கள் (மார்க்கங்கள்) தடையில்லை என்ற சமத்துவ கோட்பாட்டை முழங்கி, கலப்பு திருமணம் தேசகுற்றமோ சமூக குற்றமோ அல்ல என்பதை யதார்த்த எழுத்தின் மூலம் அழுத்தமாக நிறுவுகிறார்.


மேலும் வினைப்பயன் என்ற கதையின்மூலம் சாதியலின் கோரமுகத்தில் கரியள்ளிப்பூசி சமத்துவப் பறையை நன்றாக ஓங்கி அறைந்து இருக்கிறார் ஆசிரியர். 


இன்னும் இதுபோன்ற பல நூல்களை அண்ணன் பொள்ளாச்சி அபி அவர்கள் இந்த சமூகதீதிற்கு படைத்தளிக்க வேண்டும், அதற்கு அவரது உடல்நலம் நல்ல வலிமைபெற வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். 


முற்போக்கு சிந்தனையும் சமூக அக்கறையும் உள்ள அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் பாட்டையா. 



29 ஆகஸ்ட் 2023

பாட்டையா நூல் அறிமுகம்- முகில்நிலா தமிழ்

 பாட்டையா சிறுகதை தொகுப்பு வாசிப்பனுபவம்.. 


பொள்ளாச்சி அபி அவர்கள் எழுதிய மூன்றாவது நூல் இது.. "ஆதலினால் காதலித்தேன்" என்னும் நாவலையும், "எங்கேயும் எப்போதும்" என்னும் சிறுகதை தொகுப்பையும் அடுத்து இது மூன்றாவது சிறுகதை தொகுப்பு.. 


அயர்ச்சி தராத கதைத் தேர்வு, சொற்கள், சாமானியர்களை கதை நாயகர்களாக தேர்வு செய்த முறை என பாராட்டுக்களை முன்பே ஆசிரியரிடம் தெரிவித்து விடுகிறேன்.. 


இந்தத் தொகுப்பில் நான் வாசித்து உணர்ந்த வாசிப்பனுபவம் மட்டும் தான் இது.. மற்றபடி இது விமர்சனம் அல்ல.. என் உள்வாங்கும் திறனை மட்டும் கருத்தில் கொண்டு நான் எழுதும் வாசிப்பனுபவம் என்பதை வாசிப்போருக்கு முன்பே தெரிவித்து விடுகிறேன்.. 


இந்தத் தொகுப்பின் 

பாட்டையா தலைப்பில் உள்ள முதல் கதை... அவமானம் குறித்தும் அதிலிருந்து எப்படி மீள்வது என்றும், அவமானப் படுத்தியவரின் பிண்ணனி ,அனுபவம், அவர் பக்க நியாயம் என இரண்டு தரப்பையும் குறித்து எழுதியிருப்பது ஆசிரியரின் பக்குவ மனநிலை என்று நினைக்கிறேன்.. 


இளையராஜா ஒரு மேடையில் பார்த்திபனை அவமானப் படுத்துவார்... இளையராஜாவை பொறுத்தவரை அவர் இசையின் மேலான காதலில்.. அதன் நுட்பம் அறிந்தவர் என்ற விதத்தில், இன்னும் சொல்லப் போனால் தான் அவருக்குச் செய்வது அவமானம் என்ற எண்ணம் கூட இல்லாது செய்துவிடுவார்..


இங்கே பார்த்திபனின் இசை அனுபவம் குறித்த ஒரு கேள்வியும் இருக்கிறது.. என்றாலும் எனக்கென்னவோ இளையராஜா அவர்களின் செயலை ஏற்க முடியவில்லை. கலை மீதான காதலை விட சக மனிதனை காயப் படுத்தி விடக்கூடாதென்ற மனிதம் இருக்க வேண்டுமென கருதுகிறேன்.


அப்படி அவமானப் பட்டவன் அதை தன் வெற்றிக்கான மூலதனமாக இந்தக் கதையில் மாற்றிக் கொள்வது அவமானத்தை எதிர்கொள்ளும் யுக்தி இப்படி இருக்க வேண்டுமென்று ஆசிரியர் சொல்வதாகப் பட்டது.. 


"சஹாபி "

இது மதங்களின் மூலம் பெண் எப்படி அடிமைப் படுத்தப் படுகிறாள் என்பதையும், பெண்ணுக்கான கெளரவம் எதுவாக இருக்க முடியும் என்பதையும், திருமணத்தில் நடக்கும் சடங்குகள் சம்பிரதாயங்களை வரையறை செய்யும் ஆணாதிக்க மனோபாவம் பெண்களை எந்த அளவு மட்டம் தட்டுவதாக  இருக்கிறது என்பதையும் மிக அழுத்தமாக பேசுகிறது.. 


"ஒப்பனைக்காரன்" கதை இந்தத் தொகுப்பில் மிக முக்கியமான கதை, சமூகத்தின் மன வக்கிரங்களை, இயற்கைக்கு புறம்பான செயற்கை தனங்களை, பெற்றவர்கள் பிள்ளையின் மீது காட்டும் கொடூரமுகத்தை, மூன்றாம் பாலினத்தவரின் கண்ணீரை  சிறப்பாக எடுத்துப்பேசும் கதை, அதன் முடிவு தான் இந்தக்கதையின் ஹைலைட்... வாசிச்சு பாருங்க.


"மகிழம்பூ"  ஆண், பெண் நட்பு ஆண்டுகள் கடந்தும் நட்பாகவே நீடிக்கும் கதை.. இந்த காலகட்டத்தில் மிக அவசியமாய் அனைவருமே வாசிக்க வேண்டிய கதை, ஆண் பெண் நட்பில் சலனமின்றி கடக்கவும் அவரவர் ஒத்துழைப்போடு காலம் கடந்து நிலைப்பதும் நடைமுறை சாத்தியமென உண்மையில் நடந்ததை கதையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்.


வினைப்பயன் கதை மிக முக்கியமான கதை, சமூகத்தின் சாதி வெறி இன்னும் எப்படி ஊறிக்கிடக்கிறது என்பதையும், விஞ்ஞான வளர்ச்சியில் எல்லாமும் சாத்தியமாகும் போது இந்த சாதியும் ஒருநாள் ஒன்றும் இல்லாது அழிந்து போகும் என்பதையும் மையக் கருத்தாய் வைத்து எழுதப்பட்ட கதை.. 


இந்த நூல் வாசிப்பனுபவம் என்பது ஆரம்பிக்கும் போது எப்படியோ முடிவுவரை அப்படியே எந்தத் தொய்வும் இன்றி வாசிக்க கூடியதாக இருக்கிறது.. எளிய மனிதர்களை எளிய சொற்களோடு  தேவையற்ற கற்பனைகளோ, வர்ணணைகளோ இன்றி நம் எண்ணவோட்டத்தில் காட்சிப் படுத்தும் விதமாக எழுதியிருக்கிறார் அதற்கு என் பாராட்டுக்கள்.. 


சிறுகதை எழுத பழகுவோருக்கு இவரது எழுத்துநடை கதை நகர்த்தும் யுக்தி கதைக்கு அவசியமான காதாப் பாத்திரங்கள் தேர்வு என கற்றுக் கொள்ள வசதியாய்  இருக்கும்.. வாங்கி வாசித்து கருத்துக்களை பகிருங்கள்.. 


அன்புடன் முகில் நிலா தமிழ் .


பாட்டையா நூல் அறிமுகம்- பொள்ளாச்சி இலக்கியவட்டம்














 

பாட்டையா நூல் அறிமுகம் அசரப் அலி


 அன்புத்தோழன் அசரப் அலி Asraf Ali யின் பார்வையில் "பாட்டையா'' சிறுகதை தொகுப்பு குறித்து...

+++++++++


இலக்கிய வட்டத்தில் பொள்ளாச்சி அபி என்று அறியப்படும் அன்பிற்குரிய தோழர் அக்பர் அவர்கள் தனது முதல் படைப்பான ஆதலினால் காதலித்தேன், எங்கேயும் எப்போதும் தொடர்ந்து மூன்றாவது படைப்பாக  #பாட்டையா என்ற 'சிறுகதை தொகுப்பை படைத்துள்ளார்.


புத்தகத்தின் பெயரை தாங்கி நிற்கும் #பாட்டையாசிறுகதை ஒடுக்கப்பட்ட மக்களின் இசைக்கருவியான பறை குறித்தும், விசேஷ நாட்களில் திருவிழாக்களில், இல்லங்களில் இசைக்கப்படுகிற கருவியும் அந்த இசைக்கு ஏற்ப தங்கள் நளினமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய நபர்களின் திறன் குறித்தும், பாட்டையா என்கிற ஒரு பாத்திரத்தின் மூலமாகவும், முத்து வீரன் என்ற பாத்திரத்தின் வழியாகவும் நம்முள் கடத்தி விடுகிறார்.

அதை படிக்கும்போது அந்த இசையோடு, அந்த ஆட்டத்தோடு நாமும் கலந்து விடுகிற நிலையை ஏற்படுத்துகிறது.


ஆண்கள் பெண்களை அடக்கி ஆள்கிற ஆணாதிக்க மனப்போக்குகள் குறித்தும், இஸ்லாத்தில் திருமணம் ஆகக்கூடிய பெண்களுக்கு மணமகன் சார்பில் கொடுக்கக்கூடிய மகற் குறித்தும் #சஹாபி என்ற சிறுகதை மூலம் விரிவாக பேசியிருக்கிறார்.


திருநங்கைகளாக,திருநம்பிகளாக நம் மத்தியில் வாழ்ந்து வரக்கூடிய மூன்றாம் பாலினத்தவர்களின் வலிகள், வேதனைகள், அவமானங்கள் குறித்து பேசக்கூடிய #ஒப்பனைக்காரன் சிறுகதை அப்படிப்பட்டவர்கள் வழிபாட்டுக்கு உரியவர்களாக மாறக்கூடிய சமுதாயப் போக்குகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. 


ஆணும்-பெண்ணும் நண்பர்களாய் இருப்பதை, திருமணத்திற்கு பின்பு நண்பர்களாக நீடிப்பதை இச்சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. 

ஆனால் , ஆணும் - பெண்ணும் 40 ஆண்டுகளாக நண்பர்களாக நீடிப்பதை  தன் சொந்த வாழ்க்கை அனுபவத்தினுாடே அக்பர் பதிவு செய்திருந்த #மகிழம்பூ.


இன்றைய சூழலில்,  பெண்கள் அதிக அளவில் படித்து வேலைக்கு செல்லக்கூடிய நிலையில் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றங்கள், வெவ்வேறு மதங்களை பின்பற்றுகிற குடும்பங்களில் திருமணங்கள ஏற்படுத்துகிற தாக்கங்கள், ஆனாலும் உண்மைநிலை என்ன என்பது குறித்து #நெருப்புக்குதிசையில்லை என்ற கதை மூலம் வெளிப்படுத்துகிறார்.


நவீன உலகில் ஏற்பட்டு வரக்கூடிய விஞ்ஞான மாற்றங்கள் அதனால் விளையும் நன்மைகள் குறித்து, 

குறிப்பாக இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளக்கூடிய குழந்தையின்மை பிரச்சனையை மையப்படுத்தி, அதோடு போகிற போக்கில் சாதிய பெருமிதம், சாதிய வெறி, சாதிய பாகுபாடு பேசுகிறவர்கள் முகத்தில் ஓங்கி அறைந்தார் போல் சொல்லப்படுகிறது #வினைப்பயன் என்கின்ற சிறுகதை, 


வேறு வேறு பரிமாணத்தில் ஒவ்வொரு சிறுகதைக்கான கதைக்களத்தை அமைத்து இத்தொகுப்பை தோழர் பொள்ளாச்சி அபி  தந்துள்ளார். 


தோழர் பொள்ளாச்சி அபிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

பாட்டையா நூல் அறிமுக உரை-ஜி.சிவக்குமார்

 பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் சார்பில் பொள்ளாச்சி அபி எழுதிய பாட்டையா சிறுகதைத் தொகுப்பு 20-8-23 அன்று நூல் வெளியீடும் அறிமுகமும் நடைபெற்றது.

நூலை அறிமுகப் படுத்தி எழுத்தாளர்  ஜி.சிவக்குமார் உரையாற்றினார்.இதனையடுத்து எழுத்தாளர். பொள்ளாச்சி அபி ஏற்புரையாற்றினார். சிறப்பாக நடைபெற்ற விழாவின் காணொலி தொகுப்பு..


https://youtu.be/Ni6gAvjTIpw

பாட்டையா நூல் அறிமுகம்-முனைவர்.வா.நேரு

 மதிப்பிற்குரிய தோழர் முனைவர் வா.நேரு அவர்களுக்கு எனது நன்றியும்,அன்பும்..!

+++±+++

MONDAY, 28 AUGUST 2023

அண்மையில் படித்த புத்தகம் : பாட்டையா (சிறுகதைத் தொகுப்பு)...பொள்ளாச்சி அபி

 


அண்மையில் படித்த புத்தகம் : பாட்டையா (சிறுகதைத் தொகுப்பு)


நூல் ஆசிரியர்               : பொள்ளாச்சி அபி


வெளியீடு                   : ஒரு துளிக்கவிதை,புதுச்சேரி,7810098433


முதற்பதிப்பு                 : 2023, பக்கங்கள் : 76,விலை ரூ 125


தோழர் பொள்ளாச்சி அபி அவர்களின் அண்மையில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு பாட்டையா. ஆறு சிறுகதைகள் மட்டுமே உள்ள தொகுப்பு.ஒரே மூச்சில் படித்து முடிக்க முடிந்த தொகுப்பு.


கதைத் தலைப்பாக இருக்கும் பாட்டையா, இறப்பு வீட்டில் பறை அடிப்பவருக்கும்,அந்தப் பறை இசைக்கு ஏற்ப நடனமாடும் பாட்டையாவுக்கும் ஏற்படும் போட்டியைப் பற்றி விவரிக்கும் கதை.தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நடிகை பத்மினி நாட்டியம் ஆட,நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நாதஸ்வரம் வாசிக்கும் அந்தக் காட்சியை எத்தனை முறை பார்த்து பார்த்து நாம்  ரசித்து இருப்போம். திரைப்படத்தில் பார்க்கும் காட்சியைப் போலவே சொற்களால் காட்சியைக் கட்டி நமது கண் முன்னே பார்க்கவிடுகிறார் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி. பறை இசை இசைக்கும் முத்துவீரனுக்கு ஏற்படும் அவமானம்,அந்த அவமானத்தினால் அவர் மிகத் தெளிவாக பறை இசையைக் கற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சிகள்,அதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் பயிற்சிகள் என மிக விரிவாக இந்தக் கதை விவரிப்பதும்,முடிவில் தன்னுடைய அத்தனை இசைக்கும் ஏற்ப நடனமாடும் பாட்டையாவை,அவரது பெருந்தன்மையை வியந்து பாராட்டுபவராக முத்துவீரன் மாறுவதாகவும் முடித்திருப்பது மிகச்சிறப்பு.வெகு நுட்பமான விவரிப்புகள் அடங்கிய கதை இது. இந்தத் தொகுப்பிற்கே மிகப்பெரும் மெருகூட்டும் கதை இந்தப் ‘பாட்டையா ‘ என்னும் சிறுகதை.

இஸ்லாமிய குடும்பங்களில் திருமணத்தின்போது கொடுக்கப்படும் ‘மஹர்’ என்னும் தொகையைக் கருவாகக் கொண்ட ‘சஹாபி ‘ என்னும் சிறுகதை எனக்கு முற்றிலும் வேறுபட்ட வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தது. இந்தச்சிறுகதையில் இருக்கும் பல சொற்கள் இஸ்லாமியக் குடும்பங்களில் புழங்கும் சொற்கள், எந்தவிதமான அருஞ்சொற்பொருள் விளக்கமும் இல்லாமல் கதை ஓட்டத்தின் மூலமாக அந்தச்சொற்களின் பொருளை நாம் புரிந்து கொள்வதுபோல அமைத்திருப்பது இந்தக் கதையின் பலம்.’பாத்திமா’’ன்னுதான் பெயர் வைக்கவேண்டுமென்று ,மருமகள் கூறுவதாக இந்தக் கதை முடிவது வாசிப்பவருக்கு ஒரு நிம்மதியைத் தருகின்ற முடிவு.


அதைப்போலவே ‘நெருப்புக்கு திசையில்லை ‘ என்னும் கதை ,நுட்பமாக அண்ணன் தங்கைக்கு இடையே நடக்கும் சொத்துப் பிரச்சனையை அடிப்படையாக வைத்துப் பேசுகிறது. இந்தக் கதையில் ஒரு இஸ்லாமியப்பெண், அசோக் என்பவரை ,வீட்டினரை எதிர்த்து திருமணம் செய்து வாழ்வதாகவும்,அதே போல மகிழும்பூ கதையில் அக்பர் என்பவர் பிரேமா என்பவரைத் திருமணம் செய்து வாழ்வதாகவும் அமைத்து. இரண்டு கதைகளிலும் பெருந்தன்மையையும் விட்டுக்கொடுத்தலும் மணவாழ்க்கையை எவ்வளவு செம்மைப்படுத்தும் என்பதைச்சொல்வதாக இருக்கிறது.


வினைப்பயன் என்னும் கதை இன்றைய கால கட்டத்திற்குத் தேவையான கதை.சந்திரயான் 3 நிலாவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும் செய்தியை வெளியிட்டிருக்கும் செய்தித்தாளிலேயே திருப்பூரில் பட்டியலினப்பெண் சமைக்கிறார் என்று சொல்லி தங்கள் குழந்தைகளை திருப்பி அழைத்துச்சென்ற பெற்றோர்களைப் பற்றியும் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த ‘வினைப்பயன் ‘ கதை அறிவியலுக்கும் ,நடைமுறைக்கும் உள்ள முரணை மிக நன்றாகக் காட்டியிருக்கிறது. நவீன மருத்துவவசதிகள் எப்படிக் குழந்தை பெறுவதற்கு உதவுகிறது என்பதையும் அதில் சாதி எப்படி அழிகிறது என்பதையும் இயல்பான மொழியில் வெளிப்படுத்தி இருக்கிறார் அபி.


இந்தக் கதைத் தொகுப்பில் எனக்கு கொஞ்சம் நெருடலைக் கொடுத்த கதை ஒப்பனைக்காரன்.மூன்றாம் பாலினத்தைச்சார்ந்தவராக மாறும் ராதாகிருஷ்ணன் என்பவரைப் பற்றிய கதை. குடும்பமே எப்படி மாறுகிறது,அதிலும் அம்மாவின் பாத்திரம் எவ்வளவு கொடூரமாக மாறுகிறது என்பதை வாசிப்பவர்கள் மனம் பதறும் அளவிற்குக் கதையைப் படைத்திருக்கிறார். ராதாகிருஷ்ணன் கடவுள் போல வேடமிட்டு தற்கொலை செய்வதாகவும்,அதன் மூலம் எல்லோராலும்  வெறுக்கப்பட்ட  அவர்,எல்லோரும் வணங்கக்தக்கவராக மாறுவதாகவும் கதையை முடித்திருக்கிறார்.மூன்றாம் பாலினத்தவரிடம் நாம் நிறையப் பேசவேண்டும். அவர்களுக்கு உளவியல்ரீதியாக நிறைய ஆலோசனைகளைக் கொடுக்கவேண்டும்.ஆண் பெண்போல உடை உடுத்துவதோ அல்லது பெண் ஆண்போல உடை உடுத்துவதோ அவரவர் விருப்பம்.மூன்றாம் பாலினத்தவர் உடைகள் மூலம் தங்களை ஆணாகவோ பெண்ணாகவோ மாற்றிக்கொள்வது அவரவர் விருப்பம். இன்றைய  நவீன உலகத்தில் மாற்றியே ஆகவேண்டும் என்னும் கட்டாயம் இல்லை என்பதையும் நாம் சொல்லவேண்டும். தற்கொலை எந்த நிலையிலும் தீர்வல்ல என்பதை ஒரு கதை சொல்லவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.ஆனால் இந்தக் கதை படித்து முடித்த பின்பும் நிறைய  நேரம் இதைப் பற்றி யோசிக்க வைத்தது.


“உரைநடையின் அற்புதமான வடிவங்களில் ஒன்று சிறுகதை.இதில் நாம் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசமுடிகிறது.கதையின் மையக்கருத்துகள்,வாசிப்பவரின் ஏற்புக்கும் மறுப்புக்கும் உரியது என்றாலும் கதாசிரியனின் சுதந்திரமான கண்ணோட்டத்திற்கு சிறுகதை எவ்வளவு பெரிய இடமானாலும் தருகிறது.அதனையொட்டியே எனது கருத்துகளுக்கு வடிவம் தந்திருக்கிறேன் ‘ என்று என்னுரையில் தோழர் பொள்ளாச்சி அபி குறிப்பிட்டிருக்கிறார். உண்மை.அவரது கருத்துகளை சிறுகதைகளாக ஆக்குவதில் பொள்ளாச்சி அபி வெற்றி பெற்றிருக்கிறார்.


நண்பர்களை நாம் எந்த வயதிலும் சம்பாதிக்கலாம். அப்படி தோழர் பொள்ளாச்சி அபிக்கும் எனக்கும் நாற்பது வயதுக்குப்பிறகு நண்பராக கிடைத்தவர் தோழர் அகன் என்ற அமிர்தகணேசன் அவர்கள். “ நீண்ட இடைவெளிக்குப்பின் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் தோழர் அகன்(எ) அமிர்தகணேசன் அவர்களின் ஓயாத அன்பின் விளைவாக முகிழ்த்தவை” என்று என்னுரையில் தோழர் பொள்ளாச்சி அபி குறிப்பிட்டிருக்கிறார். வாழ்த்துகள் தோழர்களே இருவருக்கும். நட்பு எப்போதும் வெற்றி பெற வைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த ‘பாட்டையா ‘நூலின்  ஆசிரியர் பொள்ளாச்சி அபி அவர்களும்,பதிப்பாளர் தோழர் அகன் அவர்களும்.

இந்த நூலை வாங்கி வாசித்துப்பாருங்கள்.உங்களுக்கும் பிடிக்கும். ‘பாட்டையா’ சிறுகதையைப் பள்ளிகளில்,கல்லூரிகளில் பாடமாக வைக்கலாம்.அவ்வளவு ஈர்ப்பாக இருக்கிறது.இதனை ஆங்கிலத்திலோ அல்லது நமக்குத் தெரிந்த வேறு மொழிகளிலோ மொழி பெயர்த்துக்கொடுத்தும் கூட தோழர் பொள்ளாச்சி அபி அவர்களைப் பாராட்டலாம்.


முனைவர்.வா.நேரு,


பாட்டையா நூல்அறிமுகம் -மீ.மணிகண்டன்

 அன்பு நண்பர்..

Mee Manikandan பார்வையில் பாட்டையா -!

மகிழ்ச்சி மிக்க நன்றியும் அன்பும் தோழரே.!

+++++

நீண்ட நாட்களுக்குப்பிறகு பொள்ளாச்சி அபி அவர்களின் எழுத்து வாசிக்கக் கிடைத்தது. தொகுப்பின் தலைப்பு பாட்டையா. தலைப்புக் கதையை முதலில் வாசிக்க ஆவல் எழுந்தது. வாசித்தபொழுது புரிந்தது வழக்கம்போல மானுட வாழ்க்கையின் ஒரு அங்கத்தை அதில் வரைந்திருக்கிறார் என்பது. ஆட்டம் தாளம் என்ற களத்தில், கோபம், பழிவாங்குதல், அறியாமை, அன்பு, காதல் என்ற உணர்ச்சிகளை அடுக்கி வைத்திருக்கிறார் அபி.


தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் போன்ற திரைக்கதைகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் போட்டி என்று பார்த்திருக்கிறோம் ஆனால் பாட்டையாவில் ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் போட்டி. இருவரையும் அனுபவம் மற்றும் அவசரம் என்று வேறுபடுத்திப்பார்க்க முடிகிறது. 


பறை இசையையும் ஆட்டத்தையும் கதையின் முக்கியப்பங்காகக் கையாண்டிருக்கிறார் அபி. ஒண்ணாம் அடி, இரண்டானடி என்று துல்லியமாக இசையையும், இசைப்பதற்குத் தேவையான கருவிகளையும், கருவிகளின் அமைப்பு அவற்றின் தேவை, ஓசையெழுப்ப உதவும் உபகரணங்களாக சிம்புக்குச்சி, உருட்டுக்குச்சி என்று மிக நுணுக்கமாகவும், அவை எந்த விதமான மரத்தில் அமைந்திருக்கவேண்டும் என்பது முதற்கொண்டு நுட்பமாகவும் கையாண்டிருக்கிறார். 


முத்துவீரனின் அனுபவம் குறைந்த தொடக்கமும், பின்னர் பல இடங்களுக்கு சென்று இசையைக் கற்றுவருவதும், தீவிர முயற்சியும் தொடர் பயிற்சியும், நிறைவாகப் பாராட்டத்தக்க நிகழ்வும், கற்றல் மற்றும் பயிற்சியினால் விளையும் பயன் என்ன என்பதனைக் கோடிட்டுக்காட்டுகிறது.


ஆட்டத்தையும் இசையையும் ஒளிப்படமாகப் பதிவு செய்வது எளிது ஆனால் அவற்றை எழுத்தில் வடிப்பது ஒரு சவால்.  அபி அந்தச் சவாலில் வென்றிருக்கிறார்.


பாட்டையாவின் நடனத் தொடக்கத்தை கோவில் தேர் கிளம்புவதையும் ஆட்டத்தின் நிறைவை தேர் நிலைக்கு வருவதாகவும் தொடர்நிலையாக உவமைப்படுத்தியிருப்பது அழகு.


செல்வி மற்றும் முத்துவீரனின் உரையாடலில்  காதலும் இருக்கிறது வீரமும் இருக்கிறது. ஆங்காங்கே கதை கொங்கு வழக்குச்சொற்களில் மணக்கிறது, உதாரணம் 'இட்டேரியில் ஆடுகள் மேய்ப்பது'.


வாழ்த்துகள் அபி சார், அடுத்தொரு கதையை வாசித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.


பாட்டையா நூல் அறிமுகம்-அசரப் அலி

 அன்புத்தோழன் அசரப் அலி Asraf Ali யின் பார்வையில் "பாட்டையா'' சிறுகதை தொகுப்பு குறித்து...

+++++++++


இலக்கிய வட்டத்தில் பொள்ளாச்சி அபி என்று அறியப்படும் அன்பிற்குரிய தோழர் அக்பர் அவர்கள் தனது முதல் படைப்பான ஆதலினால் காதலித்தேன், எங்கேயும் எப்போதும் தொடர்ந்து மூன்றாவது படைப்பாக  #பாட்டையா என்ற 'சிறுகதை தொகுப்பை படைத்துள்ளார்.


புத்தகத்தின் பெயரை தாங்கி நிற்கும் #பாட்டையாசிறுகதை ஒடுக்கப்பட்ட மக்களின் இசைக்கருவியான பறை குறித்தும், விசேஷ நாட்களில் திருவிழாக்களில், இல்லங்களில் இசைக்கப்படுகிற கருவியும் அந்த இசைக்கு ஏற்ப தங்கள் நளினமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய நபர்களின் திறன் குறித்தும், பாட்டையா என்கிற ஒரு பாத்திரத்தின் மூலமாகவும், முத்து வீரன் என்ற பாத்திரத்தின் வழியாகவும் நம்முள் கடத்தி விடுகிறார்.

அதை படிக்கும்போது அந்த இசையோடு, அந்த ஆட்டத்தோடு நாமும் கலந்து விடுகிற நிலையை ஏற்படுத்துகிறது.


ஆண்கள் பெண்களை அடக்கி ஆள்கிற ஆணாதிக்க மனப்போக்குகள் குறித்தும், இஸ்லாத்தில் திருமணம் ஆகக்கூடிய பெண்களுக்கு மணமகன் சார்பில் கொடுக்கக்கூடிய மகற் குறித்தும் #சஹாபி என்ற சிறுகதை மூலம் விரிவாக பேசியிருக்கிறார்.


திருநங்கைகளாக,திருநம்பிகளாக நம் மத்தியில் வாழ்ந்து வரக்கூடிய மூன்றாம் பாலினத்தவர்களின் வலிகள், வேதனைகள், அவமானங்கள் குறித்து பேசக்கூடிய #ஒப்பனைக்காரன் சிறுகதை அப்படிப்பட்டவர்கள் வழிபாட்டுக்கு உரியவர்களாக மாறக்கூடிய சமுதாயப் போக்குகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. 


ஆணும்-பெண்ணும் நண்பர்களாய் இருப்பதை, திருமணத்திற்கு பின்பு நண்பர்களாக நீடிப்பதை இச்சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. 

ஆனால் , ஆணும் - பெண்ணும் 40 ஆண்டுகளாக நண்பர்களாக நீடிப்பதை  தன் சொந்த வாழ்க்கை அனுபவத்தினுாடே அக்பர் பதிவு செய்திருந்த #மகிழம்பூ.


இன்றைய சூழலில்,  பெண்கள் அதிக அளவில் படித்து வேலைக்கு செல்லக்கூடிய நிலையில் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றங்கள், வெவ்வேறு மதங்களை பின்பற்றுகிற குடும்பங்களில் திருமணங்கள ஏற்படுத்துகிற தாக்கங்கள், ஆனாலும் உண்மைநிலை என்ன என்பது குறித்து #நெருப்புக்குதிசையில்லை என்ற கதை மூலம் வெளிப்படுத்துகிறார்.


நவீன உலகில் ஏற்பட்டு வரக்கூடிய விஞ்ஞான மாற்றங்கள் அதனால் விளையும் நன்மைகள் குறித்து, 

குறிப்பாக இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளக்கூடிய குழந்தையின்மை பிரச்சனையை மையப்படுத்தி, அதோடு போகிற போக்கில் சாதிய பெருமிதம், சாதிய வெறி, சாதிய பாகுபாடு பேசுகிறவர்கள் முகத்தில் ஓங்கி அறைந்தார் போல் சொல்லப்படுகிறது #வினைப்பயன் என்கின்ற சிறுகதை, 


வேறு வேறு பரிமாணத்தில் ஒவ்வொரு சிறுகதைக்கான கதைக்களத்தை அமைத்து இத்தொகுப்பை தோழர் பொள்ளாச்சி அபி  தந்துள்ளார். 


தோழர் பொள்ளாச்சி அபிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.